வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 1
ஆங்கில பெயரான ‘பைபிள்‘ என்னும் வார்த்தை ‘பிபிலியா’ என்ற கிரேக்க பெயரில் இருந்து வரும் பன்மை பொருளான ‘பிபிலியோன்‘ அல்லது ‘பிபிலியோஸ்’ என்ற பெயரில் இருந்து வந்தது.தமிழில் ‘வேதாகமம்‘ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஆராதிக்கிற எங்களுடைய தேவன் ‘பரிசுத்தர்’ என்ற படியால் அவருடைய வார்த்தைகளை உள்ளடக்கிய வேதாகமம் ‘பரிசுத்த வேதாகமம்’ என்று அழைக்கப்படுகிறது. பரிசுத்த வேதாகமம் 66 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பழைய எற்பாட்டில் 39 புத்தகங்களும் , புதிய ஏற்பாடடில் 27 புத்தகங்களும் உள்ளது. இங்கே ஏற்பாடு (டெஸ்டமென்ட்) என்ற சொல்லுக்கு ‘ உடன்படிக்கை ‘ என்று பொருள்.
Comments
Post a Comment